கஜா பாதித்த பகுதிகளில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை (7 மணி நேரம்) கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளது.

திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் சில பிரிவுகளில் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோர்கள் அபராதமின்றி ஜனவரி 20-ம் தேதி வரை கட்டணத்தை செலுத்தலாம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
திருவாரூரில் 22 மின் பிரிவுகள், நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் பகுதிகளில் 8 மின் பிரிவுகளுக்கு மட்டும் மின் கட்டணம் செலுத்த ஜனவரி 20-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அண்மையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர், நாகப்பட்டினம்  மாவட்டங்களில் உள்ள சில குறிப்பிட்ட பிரிவுகளில் டிசம்பர் 6-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய மின் நுகர்வோர்கள் அபராதமின்றி ஜனவரி 20-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு வழங்கி மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி கோட்டத்திலுள்ள மேற்கு மன்னார்குடி உள்ளிக்கோட்டை, வடக்கு மன்னார்குடி, கிழக்கு மன்னார்குடி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், வடுவூர், நீடாமங்களம், கோவில்வென்னி, திருத்துரைப்பூண்டி நகரம் மற்றும் ஊரகம், கோட்டுர், முத்துப்பேட்டை, பல்லன்கோயில், பெரையூர், எடமேலையூர், பறவைக்கோட்டை, திருமாக்கோட்டை, கச்சனம், அடியக்காமங்களம், திருவாரூர் மேற்கு, கொரடச்சேரி பிரிவுகளில் உள்ள மின் நுகர்வோர்கள் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாங்கண்ணி, சிக்கல், திருப்பூண்டி, திருக்குவளை, வேதாரண்யம், வாய்மேடு, கரியப்பட்டினம், விழுந்தமாவடி பிரிவுகளில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு ஜனவரி 20-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Also watch

Published by:DS Gopinath
First published: