தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
தமிழக வாழ்உரிமை கட்சி தலைவரும் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த இவர்களுக்கு, விவாகரத்து ஆகி 4 வருடங்கள் ஆகின்றன.
இந்நிலையில், சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான காமலாலயத்தில், அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் காயத்ரி பாஜகவில் இணைந்தார். அவருக்கு மாநில தலைவர் அண்ணாமலை உறுப்பினர் அட்டையை வழங்கி பாஜகவுக்கு வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் பி.செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காயத்ரி தற்போது காஞ்சிபுரத்தில் வசித்து வருகிறார்.
சமீப நாட்களில் திமுக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளின் உறவினர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த வாரம் திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பாஜகவில் இணைந்தார். அது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது.
Must Read : மத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது திமுக அரசுக்கு நல்லது - வானதி சீனிவாசன்
இந்நிலையில், வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி. பாஜகவில் இணைந்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.