தென் சென்னையைக் கைப்பற்றினார் தமிழச்சி தங்கப்பாண்டியன்!

தமிழச்சி தங்கப்பாண்டியன்

நடுத்தர மக்களிடன் தான் இன்னும் ஒரு கிராமத்துப் பெண் தான் என்ற அணுகுமுறை ஆகியவை தமிழச்சி தங்கப்பாண்டியனுக்குப் பெரிதும் கைகொடுத்தது.

  • Last Updated :
  • Share this:
திமுக-வின் கோட்டையாகவே இருந்து வரும் தென்சென்னை தொகுதியில் மூன்றாம் முறையாக இரட்டை இலை துளிர்ப்பதைத் தடுத்து உதய சூரியனை வெற்றி பெறச் செய்துள்ளார் தமிழச்சி தங்கப்பாண்டியன்.

படித்தவர், மக்களை எளிதில் கவரக்கூடியவர் என பல ப்ளஸ் பாயிண்ட்கள் உடன் தென்சென்னையை எளிதில் கைப்பற்றியுள்ளார் தமிழச்சி தங்கப்பாண்டீயன். நட்சத்திர மக்களவைத் தொகுதியான தென் சென்னையில் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் அதிமுக சார்பில் போட்டியிட்டார். அமமுக சார்பில் இசக்கி சுப்பையா போட்டியிட்டார்.

படித்தவர்கள் நிறைந்த தென் சென்னை தொகுதியில் பல ஆண்டுகள் திமுக தான் ஆட்சி செலுத்தியுள்ளது. இம்முறை பாஜக-வின் கூட்டணி திமுக-வுக்குப் பெரும் பின்னடைவாக தமிழகத்தில் அமைந்தது தமிழச்சிக்குப் பெரிய பலமானது.

மேலும், வெற்றியைக் கருதாது ஜெயவர்தனை தோற்கடிப்பதற்காகவே களப் பணியாற்றிய அமமுக வேட்பாளரின் செயல்பாடுகளும் திமுக-வின் வெற்றிக்கு உதவியது.

படித்தவர்களை நோக்கி ஒரு படித்த வேட்பாளராக செய்த பிரசாரங்கள், நடுத்தர மக்களிடன் தான் இன்னும் ஒரு கிராமத்துப் பெண் தான் என்ற அணுகுமுறை ஆகியவை தமிழச்சி தங்கப்பாண்டியனுக்குப் பெரிதும் கைகொடுத்தது. அதிமுக-வின் ஜெயவர்தன் மீது தென்சென்னை மக்களுக்குப் பல குறைகள் இருந்தன.

வெற்றி பெற்றப் பின்னர் தொகுதியை ஒரு முறை கூட எட்டிப்பார்க்காதது ஜெயவர்தனுக்கும் மிகப்பெரும் பின்னடைவாக அமைந்தது.
Published by:Rahini M
First published: