• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ”வருமானத்தை எதிர்பார்க்கும் தங்க தமிழ்ச்செல்வன் தன்மானத்தை பற்றி பேசக்கூடாது” - தமிழிசை

”வருமானத்தை எதிர்பார்க்கும் தங்க தமிழ்ச்செல்வன் தன்மானத்தை பற்றி பேசக்கூடாது” - தமிழிசை

தமிழிசை

தமிழிசை

இந்திய வீரர்களின் உடை காவி கலருக்கு மாற்றம் குறித்து கேள்விக்கு காவி என்பது ஒரு நிறம், காவி எங்கு வந்தாலும் அதனை பாஜகவுடன் இணைத்துக் கூறுகிறார்கள் என தமிழிசை காட்டமாக பதிலளித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
வருமானத்தை எதிர்பார்க்கும் தங்க தமிழ்ச்செல்வன் தன்மானத்தை பற்றி பேசக்கூடாது எனவும் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் யாரும் அறிவாலய வாசலில் நிற்க மாட்டார்கள் எனவும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி, சென்னை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பாஜகவில் இணையும் நிகழ்வு சென்னை தி. நகரில் உள்ள கமலாலயத்தில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,
”ஜூலை 6-ம் தேதியிலிருந்து,  முதல் தீவிர உறுப்பினர் சேர்க்கை பாஜகவில் நடைபெற உள்ளதாகவும்,  இது முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் என்றும், இந்த கால கட்டத்தில் மிஸ்டுகால் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

மக்கள் புரிந்து கொள்வார்கள்:

உள்ளாட்சி, சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிபெற அடிப்படையை பலப்படுத்தி வருகிறோம்,
வருங்காலத்தில் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்திருந்தால் அதிக திட்டங்கள் கிடைத்திருக்கும் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

காவி என்றால் பாஜகதானா?

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் தொழில் செய்பவர்கள் அதை விடுத்து மாற்றுத் தொழில் செய்ய முன்வந்தால் 40,000 ரூபாய் மத்திய அரசு வழங்குகிறது எனவும், இந்திய வீரர்களின் உடை காவி கலருக்கு மாற்றம் குறித்து கேள்விக்கு காவி என்பது ஒரு நிறம்,
காவி எங்கு வந்தாலும் அதனை பாஜகவுடன் இணைத்துக் கூறுகிறார்கள் . மதுரையில் பாலத்திற்கு காவி கலர் அடித்தால் கூட அது பாஜக பாலம் என்கின்றனர்” எனவும் தமிழிசை கூறினார்.

ஜெயலலிதா விசுவாசிகள்...

யாகம் நடத்தியதால் மழை வந்ததா ? அல்லது திமுக நடத்திய போராட்டத்தால் மழை வந்ததா என கேட்டால் யாகம் நடத்தியதற்காக தான் வாய்ப்பிருக்கிறது என பேசிய தமிழிசை, வருமானத்தை எதிர்பார்க்கும் தங்கதமிழ்செல்வன் தன்மானத்தை பற்றி பேசக்கூடாது எனவும் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் யாரும் அறிவாலய வாசலில் நிற்க மாட்டார்கள் எனவும் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

Also watch: I Need You... I Like You... வாட்ஸ்அப் மூலம் பாலியல் வலை வீசிய சிஎம்டிஏ அதிகாரி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Anand Kumar
First published: