பெண்களிடம் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

கொரோனாவால் பெண்கள் பாதிக்கப்படுவது மெல்ல மெல்ல அதிகரித்து வருவது புள்ளி விபரங்கள் மூலம் உறுதியாகியுள்ளது

பெண்களிடம் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: June 15, 2020, 6:30 AM IST
  • Share this:
கடந்த ஆறு வாரத்தில் பெண்களிடம் கொரோனா பாதிப்பு 6% உயர்ந்துள்ளது.

மே 5ம் தேதி தமிழகத்தில் மொத்தம் 4058 பேர் பாதிக்கப்பட்டிருந்த பொது அதில் 1311 பேர் பெண்களாக இருந்தனர். அதாவது மொத்த பாதிப்பில் 32% பெண்களாகும். அடுத்த பத்து நாட்களில் மே 15ம் தேதி தமிழகத்தில் 3463 பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். அப்போது மாநிலத்தில் மொத்தம் 10,108 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். பாதிக்கப்பட்ட பெண்களின் சதவீதம் 34% ஆக உயர்ந்தது.

இந்நிலையில், தற்போது தமிழகத்தில் மொத்தம் 44661 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 17,124 பேர் பெண்கள் ஆவர். தற்போது பாதிக்கப்பட்டவர்களில் 38% பேர் பெண்களாக உள்ளனர்.


வெளிநாடு பயணம் மேற்கொண்டவர்கள் மூலம் நோய் பரவல் தொடங்கியதால், முதலில் பெண்களில் அதிக பாதிப்பு இல்லை. ஆனால், தற்போது நோய் பரவல் அதிகமாகி வரும்போது வீட்டில் உள்ள பெண்களுக்கும் தொற்று ஏற்படுகிறது.

அதிலும் வயது வாரியாக பார்த்தால் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் கிட்டத்த சரி பாதி ஆணும், பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளனர். 13-60 வயதில் 37.7% பாதிப்பும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 38.21% பாதிப்பும் பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை விட அவர்களின் இறப்பு சதவீதம் குறைவாக உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 38% பாதிப்பு பெண்கள் என்றாலும் இறப்புகளில் 31% சதவிகிதம் மட்டுமே பெண்கள் ஆவர். தற்போது வரை தமிழகத்தில் ஏற்பட்ட 435 இறப்புகளில் 135 பெண்கள் ஆவர்.Also See: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அரிய புகைப்படங்கள்


First published: June 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading