ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மீண்டும் மழை..! வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மீண்டும் மழை..! வானிலை மையம் தகவல்

மழை

மழை

கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் ஊத்துவில் 9 செ.மீ, மாஞ்சோலை மற்றும் காக்காச்சியில் தலா 6 செ.மீ மழை பதிவு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று மற்றும் நாளை தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வட உள் தமிழக மாவட்டங்களில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

31.12.2022 முதல் 02.01.2023 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; உதயநிதிக்கு முதல்வர் ஸ்டாலின் சொன்ன அட்வைஸ்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் ஊத்துவில் 9 செ.மீ, மாஞ்சோலை மற்றும் காக்காச்சியில் தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

First published:

Tags: Tamilnadu, Whether