ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

மாதிரி படம்

மாதிரி படம்

அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

    சென்னையை பொருத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்பு உள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஆவின் மாதந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்க அதிரடி உத்தரவு

    25.11.2022 முதல் 28.11.2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பக்கத்தில் 10 செண்டி மீட்டர் மழையும், திருத்தனி மற்றும் காஞ்சிபுரத்தில் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

    Published by:Arunkumar A
    First published: