ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

"பசங்களா டிவி பாக்காதீங்கா ஸ்கூல் போங்க " வெதர்மேன் கொடுத்த வெதர் அப்டேட்!

"பசங்களா டிவி பாக்காதீங்கா ஸ்கூல் போங்க " வெதர்மேன் கொடுத்த வெதர் அப்டேட்!

மாதிரி படம்

மாதிரி படம்

பள்ளிக் குழந்தைகளும் ஆசிரியர்களும் பள்ளிக்குத் தயாராகி, அறிவிப்புக்காக டிவி பார்க்க வேண்டாம் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பள்ளிக் குழந்தைகளும் ஆசிரியர்களும் பள்ளிக்குத் தயாராகுமாறும் அறிவிப்புக்காக டிவி பார்க்க வேண்டாம் என வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.

  வடகிழக்குப் பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கிய நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது.

  வட இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்து வந்ததால் தொடர்ந்து இரண்டு நாட்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மழை எப்படி இருக்கும் என அதிகாலையிலே  வெத்ர்மேன் அப்டேட் கொடுத்துள்ளார். இது குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள பதிவில், கடந்த 4 மணி நேரமாக சென்னை நகரின் எந்தப் பகுதியிலும் மழை பெய்யவில்லை, வரும் மணி நேரங்களிலும் அது தொடரும் என்றும் பள்ளிக் குழந்தைகளும் ஆசிரியர்களும் பள்ளிக்குத் தயாராகி, அறிவிப்புக்காக டிவி பார்க்க வேண்டாம் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

  இதையும் படிங்க: இல்லத்தரசிகளுக்கு குட் நீயூஸ்..! 3 மாசம் ஆனாலும் கெட்டுப்போகாத ஆவின் பால் அறிமுகம் - இனி அதிகாலையில் எழுந்திருக்க வேண்டாம்

  மேலும் கனமழை சென்னையில் இருந்து கடலூர் பெல்ட்டிற்கு மாறுகிறது என்றும் இது டெல்டா மற்றும் தெற்கு தமிழ்நாடு பெல்ட்டிற்கு மாறும். இதனால் விருதுநகர், ராமநாதபுரம் மதுரை மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். அடுத்த 2 நாட்களுக்கு மழை உள் தமிழக டெல்டா மற்றும் தென் தமிழகத்திற்கு மாறும் என்றும் சென்னை மற்றும் கேடிசிசியில் ஆங்காங்கே மழை பெய்யும் ஆனால் கனமழை பெய்ய வாய்ப்பில்லை என பதிவிட்டுள்ளார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Weather News in Tamil