• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • "சென்னைக்கு மழை இல்லை... இதுதான இப்போ வேணும்” தமிழ்நாடு வெதர்மேன் வேதனை

"சென்னைக்கு மழை இல்லை... இதுதான இப்போ வேணும்” தமிழ்நாடு வெதர்மேன் வேதனை

தமிழ்நாடு வெதர்மேன்

தமிழ்நாடு வெதர்மேன்

மழை பெய்தால் ஐபிஎல் போட்டி நடக்காது என்பதால், சி.எஸ்.கே ரசிகர்கள் மழையே போ.. போ...! என்று வேண்டி வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஐபிஎல் போட்டி சேப்பாக்கத்தில் இன்று நடக்க உள்ள நிலையில், மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

சென்னை - மும்பை அணிகள் மோதும் பிளேஆஃப் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்க இருக்கிறது.

கடந்த சில மாதங்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில், தற்போது வானம் கார்மேகங்களுடன் காட்சி தருகிறது. ஃபோனி புயல் காரணமாக காற்றின் ஈரப்பதம் குறைந்ததால், சில நாட்களாக சென்னையில் அனல் காற்று வீசியது.

நெருப்பின் அருகே நிற்பது போன்ற நிலை சென்னைவாசிகளுக்கு ஏற்பட்டது. இதனால், மழையை எதிர்பார்த்து அவர்கள் இருந்த நிலையில், தற்போது வானம் மழை மேகங்களுடன் இருப்பது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

ஆனால், மழை பெய்தால் ஐபிஎல் போட்டி நடக்காது என்பதால், சி.எஸ்.கே ரசிகர்கள் மழையே போ.. போ...! என்று வேண்டி வருகின்றனர்.

சமூக வலைதளங்களிலும் அவர்கள் இன்று மழை வேண்டாம்... நாளை வரட்டும் என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இதனால், அதிருப்தி அடைந்த தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், “மழை முக்கியம் இல்லை... மேட்ச்தான் வேனும் போல” என்று வேதனையுடன் கருத்து தெரிவித்திருந்தார்.



சென்னையை சுற்றிய பகுதிகளில் மழை மேகங்கள் சூழ்ந்துள்ள சாட்டிலைட் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.


மேலும், “சென்னைக்கு பெரிய மழை ஆபத்து இல்லை. இந்த அப்டேட் தான வேணும்” என்றும் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.



ஓசூர் மற்றும் புறநகர் சென்னையான தண்டலம் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. அதற்கான வீடியோவையும் அவர் இணைத்துள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: