ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

டெல்டாவில் மழை.. மதுரை பக்கமும் வெளுக்கும் - ஏரியாவாரியாக பிரித்துச் சொன்ன வெதர்மேன்

டெல்டாவில் மழை.. மதுரை பக்கமும் வெளுக்கும் - ஏரியாவாரியாக பிரித்துச் சொன்ன வெதர்மேன்

மழை

மழை

டெல்டா பக்கமும், மதுரை பக்கமும் மழை பெய்யும் என வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 3ம் தேதியை பொறுத்தவரை ''தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.'' எனக் குறிப்பிட்டுள்ளது

    Also see... மரக்காணம் பகுதியில் பெய்த கனமழையால் 3500 ஏக்கர் உப்பளம் தண்ணீரில் மூழ்கியது..

    இந்நிலையில் மழை விவரம் குறித்து தன்னுடைய பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள வெதர்மேன் நேற்றுபோலவே உள் மாவட்டங்களான ஈரோடு, சேலம், தர்மபுரி, பெரம்பலூர், அரியலுரில் மழை பெய்யும். இன்று இரவும் நாளையும் திருச்சி, நாமக்கல், கரூர் மாவட்டப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு. டெல்டாவில் கனமழை பெய்யும்.

    தென் மாவட்டங்களான கன்னியாகுமர், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யும் எனக் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் மாலை நேரத்தில் லேசாக மழை இருக்கும். ஆனால் பதட்டமடைய தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.


    Published by:Murugadoss C
    First published:

    Tags: Weather News in Tamil