Home /News /tamil-nadu /

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - சென்னை, காஞ்சிபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - சென்னை, காஞ்சிபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியுள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புவியரசன் கூறியதாவது,  “மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை வேலூர் திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைபெய்யும்.

சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம, புதுச்சேரி, கடலூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி மதுரை பெரம்பலூர் அரியலூர் திருச்சி தஞ்சாவூர் புதுக்கோட்டை சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கன கனமழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் 14 இடங்களில் மிக கனமழையும், 53 இடங்களில் கன மழையும் பதிவாகியுள்ளது அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 19 செ.மீ மழையும் கடலூரில் 17 செ.மீ மழையும் நெல்லையில் 15 செ.மீ மழையும் காஞ்சிபுரத்தில் 13 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

லட்சத் தீவு பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளதால் இன்று குமரிக்கடல் லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று  அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அக்டோபர் 1 -ம் தேதி முதல் இன்றுவரை தமிழகத்தில் 39 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட மூன்று செ.மீ அதிகம்” என்றார்.
Published by:Sheik Hanifah
First published:

Tags: Weather Update

அடுத்த செய்தி