ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இந்த 22 மாவட்டங்களில் இன்றும் கனமழை - வானிலை மையம் தகவல்

இந்த 22 மாவட்டங்களில் இன்றும் கனமழை - வானிலை மையம் தகவல்

மழைக்கு வாய்ப்பு

மழைக்கு வாய்ப்பு

Weather Update : சென்னையில் நேற்று இரவு பல இடங்களில் பலத்த மழை பெய்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

  தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

  மேலும், குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரம் ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

  இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை கடந்த மாதம் 30-ம் தேதியுடன் நிறைவு பெற்ற நிலையில், பருவமழை காலத்தில் வழக்கத்தை விட106 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. கணினி அடிப்படையிலான கணக்கீட்டின்படி, இந்த மாத கடைசி வாரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, 20-ம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் பரவலாக மழைப்பொழிவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also Read: நதியில் துர்கை அம்மன் சிலையைக் கரைக்கும்போது ஏற்பட்ட திடீர் வெள்ளம் - 8 பேர் பலி; மூழ்கியவர்களைத் தேடும் பணி தீவிரம்!

  இதனிடையே சென்னையில் நேற்று இரவு பல இடங்களில் பலத்த மழை பெய்தது. நுங்கபாக்கம், கோடம்பாக்கம் தேனாம்பேட்டை வள்ளுவர்கோட்டம், தியாகராய நகர், மெரினாசாலை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. இதேபோல புறநகர் பகுதியான அம்பத்தூர், பாடி மண்ணூர்பேட்டை, கொரட்டூர், முகப்பேர், ஆவடி,கோவில் பதாகை உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Chennai rains, Tamil News, Weather News in Tamil