ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

14ம் தேதிவரை இப்படிதான்... மிக கனமழைக்கும் வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

14ம் தேதிவரை இப்படிதான்... மிக கனமழைக்கும் வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

தமிழ்நாடு வானிலை

தமிழ்நாடு வானிலை

தமிழகம் முழுவதும் அடுத்த இரண்டு நாட்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் - தமிழ்நாடு வெதர்மேன்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு தொடங்கி கனமழை பெய்து வரும் நிலையில், நவம்பர் 15ம் தேதிவரை வானிலை இப்படிதான் இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

    வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை அதீ கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு இலங்கை பகுதியில்  நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.

    தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து 12ஆம் தேதி காலை தமிழகம் புதுச்சேரி கடற்கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதும். மேலும் தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    நேற்று இரவு தொடங்கி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு பிரதீப் அளித்த பேட்டியில், ‘கடலோர மாவட்டங்களில் இன்று தொடர்ந்து மழை பெய்யக்கூடும். தமிழகம் முழுவதும் அடுத்த இரண்டு நாட்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்” என்று தெரிவித்துள்ளார்.

    Published by:Murugesh M
    First published:

    Tags: Chennai Rain, Weather News in Tamil