ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

முடிஞ்சது மழை.. வெதர்மேன் பதிவால் குஷியில் மக்கள்!

முடிஞ்சது மழை.. வெதர்மேன் பதிவால் குஷியில் மக்கள்!

மாதிரி படம்

மாதிரி படம்

Tamilnadu weather man | தொடர் மழையால் வீடுகளுக்குள்ளேயே முடங்கிய மக்கள் தற்போது வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மழை தணிந்தது, அழகான வானிலையை ரசியுங்கள் என தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள பதிவால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மாண்டஸ் புயல் தாக்கத்தால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். தொடர்ந்து பெய்த மழையால் ஆங்காங்கே வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது.

மாண்டஸ் புயல் கரையை கடந்து தற்போது மழை தணிந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மழை தணிந்தது, அழகான வானிலையை ரசியுங்கள் என குறிப்பிட்டிருந்தது. இதனை கண்ட பொதுமக்கள், அப்பாடா இப்போதான் நிம்மதியாக இருக்கு என மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

தொடர் மழையால் வீடுகளுக்குள்ளேயே முடங்கிய மக்கள் தற்போது வீட்டை விட்டு வெளியேறி இயற்கையை ரசித்து வருகின்றனர்.

First published:

Tags: Cyclone Mandous, Heavy rain, Weather News in Tamil