ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு வானிலை.. பாடல் வரி மூலம் பக்கா அலெர்ட் - வெதர்மேன் கொடுத்த கூல் அப்டேட்!

அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு வானிலை.. பாடல் வரி மூலம் பக்கா அலெர்ட் - வெதர்மேன் கொடுத்த கூல் அப்டேட்!

வெதர்மேன்

வெதர்மேன்

வானிலை குறித்து தொடர்ந்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் பனிப்பொழிவு குறித்தும் அப்டேட் கொடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    மழைக்கு சற்று இடைவெளி விட்டிருக்கும் நிலையில் சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. இந்நிலையில் வானிலை குறித்து தொடர்ந்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் பனிப்பொழிவு குறித்தும் அப்டேட் கொடுத்துள்ளார்.

    அதில் ''அடுத்த 3-4 நாட்களுக்கு வட தமிழகம், உள் மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இது தென் மாவட்டங்களுக்கு பொருந்தாது'' எனக் குறிப்பிட்டுள்ளார். பனிதொடர்பான அப்டேட்டை பாடல் வரிகள் மூலமாகவும் குறிப்பிட்டுள்ளார் வெதர்மேன்.

    ‘’பனிவிழும்

    மலர்வனம் உன்

    பார்வை ஒரு வரம்

    பனிவிழும் மலர்வனம்

    உன் பார்வை ஒரு வரம்’’ என குறிப்பிட்டு லைக்ஸ்களையும் குவித்து வருகிறார்.

    வானிலை நிலவரம்:

    வங்கக்கடலில் கடந்த வாரத்தில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து அரபிக்கடல் நோக்கி சென்றது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியாததால் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    Also Read : திருப்பதி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. உடனே புக் பண்ணீடுங்க!

    இந்நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை மறுதினம் வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனினும், தமிழ்நாட்டில் வரும் 19-ம் தேதிவரை மிதமான மழையே பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.


    Published by:Murugadoss C
    First published:

    Tags: Weather News in Tamil