Tamilnadu weather live updates : நீலகிரி ,கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு

Latest Tamil News: வானிலை தொடர்பான செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | August 10, 2022, 13:11 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 2 MONTHS AGO

    AUTO-REFRESH

    12:55 (IST)

    நீலகிரி கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு

    மேற்குதிசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 10) வடதமிழக மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், திருப்பூர்,  தென்காசி,  திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது