சென்னையை மிரட்டும் மழை... அடையாறு ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

சென்னையை மிரட்டும் மழை... அடையாறு ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

மாதிரிப் படம்

, பூண்டி நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

  • Share this:
சென்னையில் பெய்து வரும் கனமழையால் பாதுகாப்பு கருதி நீர்நிலைகள் திறக்கப்பட்டதால், வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீர்நிலைகள் வேகமாக நிரம்பியுள்ளன. அத்துடன் பாதுகாப்பு கருதி முக்கிய நீர்த்தேக்கங்களில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அடையாறு ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் மழை காரணமாக, திருப்போரூர் பிரதான சாலையில் குளம் போல் நீர் தேங்கியது. அத்துடன், அருகில் உள்ள குடியிருப்புக்குள்ளும் நீர் புகுந்ததால் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர். குடியிருப்புக்குள் வெள்ள நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அடையாறில் தண்ணீர் சீராக செல்வதற்கு ஏதுவாக, செடி கொடிகளை தீயணைப்பு துறையினர் அப்புறப்படுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து, குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால், வெளியில் செல்ல முடியாமல் மக்கள் அவதிக்கு உள்ளாகினர். ஊராட்சி நிர்வாகத்தின் ஏற்பாட்டில், மோட்டார் என்ஜின் மூலம் நீரை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனிடையே, பூண்டி நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர். காஞ்சிபுரத்தில் தொடர் கனமழையால், சாலையெங்கும் 3 அடிக்கு மேல் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் சாக்கடை நீரும் கலந்து தேங்கியுள்ளது. இதையடுத்து, 10-க்கும் மேற்பட்ட மோட்டார் இயந்திரங்கள் மூலம் நீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்

காஞ்சிபுரத்தில் ஆறு, ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டால் உடைப்பு சரி செய்வதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக, ஒரு லட்சம் மணல் மூட்டைகளை பொதுப்பணித் துறையினர் தயார் செய்து வருகின்றனர்.
Published by:Vijay R
First published: