Home /News /tamil-nadu /

வங்கக் கடலில் புதிய காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம் - சென்னை வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் புதிய காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம் - சென்னை வானிலை ஆய்வு மையம்

கோப்பு படம்

கோப்பு படம்

Tamilnadu Weather | தேனியில் கனமழை பெய்து வருதால் வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    வங்கக் கடலில் வருகின்ற 23-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக மழை பெய்ததால், ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், மம்சாபுரத்தில் உள்ள ஓடையில், கோட்டைப்பட்டியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் குளித்த போது காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

    இதையடுத்து, பால்பாண்டி, முத்துக்கருப்பன் உடலை தீயணைப்புத்துறையினர் முதலில் மீட்டனர். தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர் 12 மணி நேரத்துக்குப் பின் கோபியின் உடலையும் மீட்டனர்..

    தொடர் மழையால் மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் சூழ்ந்துள்ளது. கழிவுநீர் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டதால், தண்ணீர் சீராக செல்ல முடியாமல் ராயபுரம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

    கால்வாயில் ஆக்கிரமிப்பு குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எந்த பயனும் இல்லை என்று, கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    தேனியில் கனமழை பெய்து வருதால் வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தேனி - கண்டமனூர் இடையே உள்ள பழமையான ஆற்றுப்பாலம் சிறிய அளவில் சேதமடைந்துள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கையாக பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது



    நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக, 7 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் 5 ஆயிரம் நாட்டுப் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
    Published by:Vijay R
    First published:

    Tags: Weather Update

    அடுத்த செய்தி