சென்னையில் கனமழை... செம்பரம்பாக்கம், பூண்டி உள்ளிட்ட முக்கிய ஏரிகளின் தற்போதைய நீர்மட்டம் என்ன?

சென்னையில் கனமழை... செம்பரம்பாக்கம், பூண்டி உள்ளிட்ட முக்கிய ஏரிகளின் தற்போதைய நீர்மட்டம் என்ன?

புழல் ஏரி

2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்திற்கு காரணமான செம்பரம்பாக்கம் ஏரியில் 20.71 கனஅடி நீர் உள்ளது. ஏரிக்கு 1720 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், 58 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் முக்கிய நீர்நிலைகளில் 1600 மில்லியன் கனஅடிநீர் அதிகரித்துள்ளது.

கிருஷ்ணா நதி நீர் திறப்பு மற்றும் வடகிழக்கு பருவமழையால் சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்களான பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியில், தற்போது 28.51 அடி நீர் உள்ளது. அணைக்கு 1095 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், 425 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 1416 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.

சோழவரம் ஏரியில் 12 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து நீர் வெளியேற்றப்படவில்லை. கடந்த மாதம் நீர் இருப்பு 102 மில்லியன் கனஅடி இருந்த நிலையில், தற்போது 142 மில்லியன் கனஅடியாக உள்ளது.

21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரிக்கு 343 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் 16.79 அடியாக இருக்கும் நிலையில், 100 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு கடந்த மாதத்திலிருந்து 342 மில்லியன் கனஅடி கூடி, 2367 மில்லியன் கனஅடியாக உள்ளது.

2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்திற்கு காரணமான செம்பரம்பாக்கம் ஏரியில் 20.71 கனஅடி நீர் உள்ளது. ஏரிக்கு ஆயிரத்து 720 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், 58 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தொட்டவுடன் பாதுகாப்பு கருதி அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்படும்.

சோழவரம், பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் என நான்கு ஏரிகளையும் சேர்த்து 1,257 மில்லியன் கனஅடி நீரை சேர்த்து வைக்க முடியும். கடந்த மாதம் 5,100 மில்லியன் கனஅடி நீர் இருந்த நிலையில், தற்போது நீர்இருப்பு 6,706 மி.கனஅடியாக அதிகரித்துள்ளது.

இந்த நீரை சேர்த்து வைத்தாலே அடுத்த ஆண்டு மே மாதம் வரை சென்னைக்கு தேவையான நீரை வழங்க முடியும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
Published by:Vijay R
First published: