முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்க கனமழை அலார்ட் - வானிலை ஆய்வுமையம்

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்க கனமழை அலார்ட் - வானிலை ஆய்வுமையம்

கனமழை

கனமழை

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய கூடும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

  • Last Updated :

குமரி மற்றும் இலங்கை கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 13 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யகூடும் என்று வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய கூடும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 18 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. குமரி மற்றும் லட்சத்தீவு கடல் பகுதியில் இன்றும் நாளையும் மணிக்கு 44 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசம் என்பதால், மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

இதேபோல் மன்னார் வளைகுடா பகுதியில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் அப்பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

First published:

Tags: Weather Update