முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

மாதிரி படம்

மாதிரி படம்

Tamilnadu Unemployment | தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 67 லட்சத்தை தாண்டியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் 10, 12 மற்றும் கல்லூரிப்படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி 31-ம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளது.

அதன் அடிப்படையில், 31 லட்சத்து 49 ஆயிரத்து 398 ஆண்கள், 36 லட்சத்து 9 ஆயிரத்து 27 பெண்கள், 273 திருநங்கைகள் என மொத்தம் 67 லட்சத்து 58 ஆயிரத்து 698 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.  இதில் 18 லட்சத்து 34 ஆயிரத்து 243 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். 28 லட்சத்து 56 ஆயிரத்து 606 பேர் 19  முதல் 30 வயது வரை உள்ள கல்லூரி படிப்பு முடித்தவர்கள் ஆகும்.

18 லட்சத்து 31 ஆயிரத்து 930 பேர் 31 முதல் 45 வயது வரை உள்ள வேலை நாடுநர்களாக உள்ளனர். 2 லட்சத்து 30 ஆயிரத்து 185 பேர் 46 முதல் 60 வயது வரை உள்ள முதிர்வு பெற்ற பதிவுதாரர்களாக உள்ளனர். இதில் சுமார் 1 லட்சத்து 45 ஆயிரத்து 481 மாற்றுத்திறனாளிகளும் உள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் கை, கால் குறைபாடுடையோர்களாக 1 லட்சத்து 12 ஆயிரத்து 359 பேரும், பார்வையற்றவர்களாக 17 ஆயிரத்து 728 பேரும், காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோரில் 14 ஆயிரத்து 28 பேரும் பதிவு செய்து வேலைக்காக காத்துள்ளனர்.

First published:

Tags: Tamilnadu, Unemployment