இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நாள் ஒன்றுக்கு மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு சுமார் 30,000 மேல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.
இதுதொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஞாயிற்றுக் கிழமையும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையான இன்றும் முழு ஊரடங்கிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 16-1-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்; தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும் என்றும் அறிவிக்ப்பட்டுள்ளது. அதன்படி,
எவையெல்லாம் செயல்படும்:
எவற்றுக்கெல்லாம் தடை:
- பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயங்காது.
- கேளிக்கை சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் தடை
- மதுபானக் கடைகள், மொபைல் கடைகள் உள்ளிட்ட
- அத்தியாவசியமற்ற கடைகள் அனைத்துக்கும் தடை
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.