களியக்காவிளை அருகே ரேஷன் அரிசி கடத்தி கேரளாவிற்கு கொண்டு செல்வது தொடர் வாடிக்கையாக நடந்து வருகின்றது. இந்நிலையில் தற்போது களியக்காவிளை அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற சுமார் 4000 கிலோ (4டன்) ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக - கேரள எல்லைப்பகுதி வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி மற்றும் மானிய மண்ணெண்ணைய், கனிமவளங்கள் கடத்துவது தொடர் நடவடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று களியக்காவிளை பொறுப்பு ஆய்வாளர் செந்தில் வேல்குமார் தலைமையில் போலீசார் களியக்காவிளை அருகே குழித்துறை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக மினிலாரி ஒன்று வந்துக்கொண்டிருந்தது. போலீசார் லாரியை நிறுத்துமாறு சைகை காட்டினர். இருந்தும் அந்த டெம்போ நிறுத்தாமல் சென்று விட்டது. தொடர்ந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று குழித்துறை அருகே திருத்துவபுரம் பகுதியில் வைத்து போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் ஓட்டுநரை விசாரணை செய்தபோது அவர் திக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஜஸ்டின்ராஜ்(35) என்று தெரியவந்தது. மேலும் லாரியை சோதனை செய்து பார்த்த போது சுமார் 4000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ரேஷன் அரிசியை முட்டம் பகுதியில் இருந்து எடுத்து வந்து கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து கடத்தல் வாகனத்தையும் , அரிசியையும் உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கடத்தல் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும், கடத்தல் வாகனத்தை வட்டாச்சியர் அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் ஓட்டுநர் மேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.