ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இரண்டாம் நிலை காவலர் தேர்வு... தமிழகம் முழுவதும் ஏராளமானோர் பங்கேற்பு

இரண்டாம் நிலை காவலர் தேர்வு... தமிழகம் முழுவதும் ஏராளமானோர் பங்கேற்பு

காவலர் தேர்வு

காவலர் தேர்வு

3,552 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு இன்று தமிழகம் முழுவதும் 295 மையங்களில் நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இரண்டாம் நிலை காவலர் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமானோர் இத்தேர்வை எழுதி வருகின்றனர்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், மற்றும் தீயணைப்பு வீரர் என 3,552 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு இன்று தமிழகம் முழுவதும் 295 மையங்களில் நடைபெற்று வருகிறது.

சேலத்தில் 22 மையங்களில் காவலர் எழுத்து தேர்வு நடைபெறுகிறது. இதில் சுமார் 21,000 பேர் தேர்வு எழுதுகின்றனர்.தேர்வு மையங்களில் 1500 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனுப்பப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 10 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. மதுரை நகர் பகுதியில் சேதுபதி மேல்நிலைப்பள்ளி , வேலம்மாள் கல்லூரி உள்ளிட்ட 12 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக தேர்வு நடைபெறுகிறது. மதுரை மாநகரில் 11 ஆயிரத்து 500 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் போடப்பட்டுள்ள பாதுகாப்பை. மாநகர காவல் ஆணையர் செந்தில் குமார் மேற்பார்வையிட்டார்.

இதையும் படிங்க: இன்றே கடைசி.. வாக்காளர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் இன்றுடன் நிறைவு

இதேபோல்,  கடலூர் மாவட்டத்தில் 12 மையங்களில் 16 ஆயிரத்து 781 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதும் போது பேசவோ, சைகை செய்யவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

First published:

Tags: Exam, Police