தமிழகத்தின் 6 இடங்களில் இன்று வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. சுட்டெரித்த வெயில் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
தமிழகத்தில் நடப்பு ஆண்டின் பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே வெயிலில் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. மார்ச் மாதத்தில் பல இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் மற்றும் அதனை தாண்டி பதிவானது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 6பகுதிகளில் வெயில் அளவு 100 ஃபாரன்ஹீட் டிகிரியை கடந்துள்ளது. ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், மதுரை நகரம், திருச்சி, வேலூர் ஆகிய 6 பகுதிகளில் வெயில் 100 ஃபாரன்ஹீட் டிகிரியை கடந்துள்ளது.
அதிபட்சமாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 40.5 செல்சியஸ் (104.5 ஃபாரன்ஹீட் டிகிரி ) வெயில் பதிவானது. அடுத்ததாக மதுரை நகரில் 39.2 செல்சியஸ் (102.56 ஃபாரன்ஹீட் டிகிரி வெயில் பதிவாகியிருந்தது. திருச்சி, மதுரை விமான நிலையத்தில் 38.5 செல்சியஸ் (101.3 ஃபாரன்ஹீட் டிகிரி) வேலூரில் 38.6 ( 101.48 ஃபாரன்ஹீட் டிகிரி) பதிவாகியிருந்தது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.