Home /News /tamil-nadu /

தமிழகத்தில் 5 இடங்களில் சதம் அடித்த வெயில்

தமிழகத்தில் 5 இடங்களில் சதம் அடித்த வெயில்

வெயில் அளவு

வெயில் அளவு

மதுரை நகரில்   39.1 செல்சியஸ் (102.48 ஃபாரன்ஹீட் டிகிரி) வெயில் பதிவானது.  அடுத்ததாக  கரூர் மாவட்டம் பரமத்தியில்  39 செல்சியஸ் (102.2 ஃபாரன்ஹீட் டிகிரி ) வெயில் பதிவாகியிருந்தது.

    தமிழகத்தில் இன்று 5 பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.

    தமிழகத்தில் நடப்பு ஆண்டின் பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே வெயிலில் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது.  மார்ச் மாதத்தில் பல இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் மற்றும் அதனை தாண்டி  பதிவானது. ஏப்ரல் மாதத்திலும் நாளொன்றுக்கு  குறைந்தது 4 பகுதிகளிலாவது 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகிவருகிறது.

    அந்தவகையில், இன்று தமிழகத்தின் 5 பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. ஈரோடு,  கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், மதுரை நகரம், திருச்சி ஆகிய 5 பகுதிகளில் வெயில் 100 ஃபாரன்ஹீட் டிகிரியை கடந்துள்ளது.

    இதையும் படிங்க: சக மாணவர்களை துரத்தித் துரத்தி துடைப்பத்தால் தாக்கிய மாணவர்


    அதிபட்சமாக மதுரை நகரில்   39.1 செல்சியஸ் (102.48 ஃபாரன்ஹீட் டிகிரி) வெயில் பதிவானது.  அடுத்ததாக  கரூர் மாவட்டம் பரமத்தியில்  39 செல்சியஸ் (102.2 ஃபாரன்ஹீட் டிகிரி ) வெயில் பதிவாகியிருந்தது. மதுரை விமான நிலையத்தில்38 செல்சியஸ் (100.4 ஃபாரன்ஹீட் டிகிரி), ஈரோட்டில் 38.6 ( 101.48 ஃபாரன்ஹீட் டிகிரி), திருச்சியில் 37.9 செல்சியஸ் (100.22 டிகிரி ஃபாரன்ஹீட்) வெயில் பதிவாகியிருந்தது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Weather News in Tamil

    அடுத்த செய்தி