LIVE | டாஸ்மாக் கடைகளில் தொடங்கியது விற்பனை - பல இடங்களில் போராட்டம்

TASMAC | 44 நாட்கள் ஊரடங்கிற்குப் பிறகு இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான செய்திகள் நேரலையாக உடனுக்குடன்..

  • News18
  • | May 07, 2020, 10:50 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 2 YEARS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    11:21 (IST)

    டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மயிலாடுதுறையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

    11:15 (IST)

    திண்டுக்கல்  சத்திரம் தெருவில் உள்ள அரசு மதுபான கடையை திறக்ககூடாது என்று கோரி திண்டுக்கல் முன்னாள்  MLA பாலபாரதி கடை முன்பாக ஆர்பாட்டம்

    11:11 (IST)

    திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே  தண்டலச்சேரி கிராமத்தில் பொதுமக்கள் எதிர்ப்பால் டாஸ்மாக் மதுக்கடை  பூட்டு போடப்பட்டது

    11:4 (IST)

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா அலுவலகம் முன்பு டாஸ்மாக் திறந்த விற்பனை செய்யபட்டு வரும் வேலையில் அறிவித்த 1000கூட கொடுக்கமால் காலம் தாழ்த்தும் தமிழக அரசை, கண்டித்து மாற்று திறனாளிகள் போரட்டம் நடத்தி வருகின்றனர்

    11:3 (IST)

    மதுபான கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பினர் திருச்சி உறையூரில் உள்ள மதுபான கடை முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் - தனி மனித இடைவெளி விட்டு 50 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

    10:57 (IST)

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கிடகுளத்தில் அரசு மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    10:52 (IST)

    கோவை தொண்டாமுத்தூரில் பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக டாஸ்மாக் கடை மூடப்பட்டது.