வார வட்டிக்கு கடன் வாங்கியும், மனைவியின் நகையை அடகு வைத்த பணத்திலும் மதுபானம்...!

News 18

கூட்டம் அதிகம் உள்ள கடைகளில் ஒரு மணி நேரத்திற்கு 70 டோக்கன் வழங்கப்படுகிறன

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா ஊரடங்கு காலத்தில் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபானக் கடைகள் 2-வது முறையாக இன்று திறக்கப்பட்டன.
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 183 மதுபானக் கடைகள் உள்ளன. இதில், தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள 33 கடைகள் தவிர மற்ற 150 கடைகள் மட்டும் திறக்கப்பட்டன.

குறிப்பாக, மாநகரில் 71 கடைகளில் 14 கடைகள் திறக்கப்படவில்லை. மாவட்டத்தில்  112 கடைகளில் 19 கடைகள் திறக்கப்படவில்லை. குறிப்பிட்ட சில கடைகள்  முன்பாக மட்டுமே முன் கூட்டியே வந்து மது வாங்க காத்திருந்தனர். கூட்டம் அதிகம் உள்ள கடைகளில் ஒரு மணி நேரத்திற்கு 70 டோக்கன் வழங்கப்படுகிறது.

கடந்த 7ம் தேதியுடன் ஒப்பிடுகையில் இன்று கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. ஆதார் கார்டு தேவையில்லை. முகக் கவசம் அணிந்து, சமூக விலகலைப் பின்பற்றி வந்தால் மட்டுமே மது விற்பனை என்று மைக்கில் அறிவித்துக் கொண்டுள்ளனர்.

கடைகளுக்கு முன்பாக தடுப்புகள் அமைக்கப்பட்டு, சானிடைசர் கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பிறகே மது வாங்க அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், மதுபானம் வாங்க வந்த பலரின்  நிலை பெரும் அதிர்ச்சியாக இருந்தது. குறிப்பாக, வார வட்டியில் ₹ 500 பணம் வாங்கி (1 வாரத்திற்கு ₹ 500க்கு ₹ 50 வட்டி) மது பானம் வாங்கிய திருச்சி உறையூரைச் சேர்ந்த பெயிண்டர் சுரேஷ்,  விவசாய அறுவடைப்பணிக்கு சென்றதையடுத்து  ஊதியத்தை பிடித்தம் செய்ததால் மனைவியின் நகையை அடகு வைத்த பணத்தில் மது பானம் வாங்கிய அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர் முரளி, காலையிலேயே வந்து, 2வது டோக்கனைப் பெற்று, மதுபானம் வாங்கிய ஓய்வு பெற்ற SSI குருநாதன் உள்ளிட்டோரைப் போன்றவர்களும் வரிசையில் நின்று மதுபானம் வாங்கிச் சென்றனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Sankar
First published: