அநீதியான தேர்வை தமிழ் குழந்தைகள் எதிர்கொள்கின்றனர்- கமல்!

நீட் தேர்வு

நீட் தேர்வு தொடர்பாகவும் தமிழக ஆட்சியாளர்கள் தொடர்பாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

 • Share this:
  நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான  நீட் தேர்வு  இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அநீதியான தேர்வை தமிழ் குழந்தைகள் எதிர்கொள்வதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளனர்.

  மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் சற்று முன்பு தொடங்கியது. மாலை 5 மணி வரை தேர்வு நடைபெறவுள்ளது. 13 மொழிகளில் இந்த தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரு லட்சத்து 11 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ் மொழியில் 19 ஆயிரத்து 867 பேர் தேர்வை எழுதுகின்றனர். இதற்காக தமிழ்நாட்டில் 224 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  நீட் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்த சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார்-ரேவதி தம்பதியின் மகன் தனுஷ் நேற்று தற்கொலை செய்துகொண்டார்.  மாணவர் தற்கொலை விவகாரத்தில் தமிழக அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார்.  இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பாகவும் தமிழக ஆட்சியாளர்கள் தொடர்பாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஓர் அநீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ்க் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்வோம் என மேடைகளில் முழங்கிய நம் அரசியலாளர்களைப் பற்றி இவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும்?!” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Murugesh M
  First published: