தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் , ஆசிரியல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவுகள் ஜனவரி 1 முதல் TNSED attendence செயலி ( App ) மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
எளிமையான முறையில் வருகையினை பதிவேற்றம் செய்வதற்காக ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் வருகைப்பதிவுக்கென மட்டும் தனியாக TNSED Attendance என்ற செயலி உருவாக்கப்பட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் வரும் 01.01.2023 முதல் இதனை தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் நடைமுறைப்படுத்திட தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் இப்புதிய செயலியை பயன்படுத்துவதற்கு முன்பு பழைய வருகை பதிவு செயலியில் இருந்து வெளியேற வேண்டும். பழைய செயலிகள் அனைத்தும் 31 டிசம்பர் 2022 முதல் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, வெல்லம் வழங்காதது ஏன்? அமைச்சர் எ.வ. வேலு விளக்கம்!
புதிய செயலியில் அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் , ஆசிரியல்லாத பணியாளர்களுக்கும் காலை மற்றும் மாலை என்று இரண்டு நேரங்களில் வருகை பதிவு செய்யப்படும். அதோடு இணைய சேவை இல்லாத நேரத்தில் வருகை பதிவு போனில் பதிவு செய்யப்பட்டு இணைய சேவை கிடைத்தவுடன் கல்வித்துறைக்கு அப்டேட் ஆகிவிடும்.
அதேபோல் இது வரை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் இல்லாத பணியாளர்களின் விடுப்பு விபரங்கள் கல்வித்துறையை அடைய இரண்டு முதல் நான்கு நாட்கள் வரை ஆகும். இந்த புதிய செயலியால் உடனுக்குடன் தெரியும் வாய்ப்பு உள்ளது. விடுப்புக்கான விண்ணப்பங்களும் இந்த செயலி மூலம் செய்ய வசதி செய்யப்படுகிறது.
இந்த செயலியில் உள்நுழைய ஏற்கனவே பணியாளர்கள் பயன்படுத்திய username , password களையே புது செயலுக்கும் பயன் படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். புதிய செயலியில் CWSN மாணவர்களுக்கு வருகை பதிவு எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரில் TNSED attendence என்று தேடியும் https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedattendance.tnemis&hl=en_IN&gl=IN&pli=1 என்ற இணைப்பு மூலமும் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Education department, School