ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அதிமுக தலைமை மோதல்.. ஸ்மார்ட் சிட்டி ஊழல்.. ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை - எதிர்பார்ப்பில் இன்றைய தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர்

அதிமுக தலைமை மோதல்.. ஸ்மார்ட் சிட்டி ஊழல்.. ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை - எதிர்பார்ப்பில் இன்றைய தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர்

தமிழக சட்டப்பேரவை

தமிழக சட்டப்பேரவை

சட்டப்பேரவையில் ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்படக் கூடும் என்பதால், சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. அதிமுகவில் தலைமை யார் என்ற மோதலால், ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஒன்றாக அமரும் இருக்கை மாற்றம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

  கடந்த 2022-23ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி மே 10ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், இந்த ஆண்டுக்கான 2வது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்நிலையில், எதிர்கட்சியாக இருக்கும் அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை பெரும் சர்ச்சையாகி தேர்தல் ஆணையத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, சட்டப்பேரவை குழுக்களை மாற்றுவது தொடர்பாக மனுக்கள் வந்தால் நிராகரிக்க வேண்டும் என்றும், அதிமுக ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் கலந்து ஆலோசிக்காமல் எவ்வித முடிவும் எடுக்கக்கூடாது என்றும் இரு கடிதங்களை ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகரிடம் கொடுத்துள்ளார்.

  இதேபோல், எதிர்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயக்குமாரை அங்கீகரித்து அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியும் கடிதங்கள் கொடுத்துள்ளார். இதில், சபாநாயகர் என்ன முடிவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக அமரும் வகையில் உள்ள இருக்கை மாற்றப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில், சபாநாயகர் முடிவுக்கு கட்டுப்படுவோம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

  தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அதில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையிலும் சசிகலா, டாக்டர் சிவக்குமார் உள்ளிட்டோரிடம் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

  Also Read:  இந்தி மொழியில் மருத்துவக் கல்வி திட்டம்... அமித்ஷா தொடங்கி வைத்து பெருமிதம்!

  இந்த இரு அறிக்கைகளும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பான அறிக்கையும் தாக்கல் செய்யப்படக் கூடும் என்பதால், சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: ADMK, DMK, MK Stalin, Tamil News, TN Assembly