Home /News /tamil-nadu /

ஏற்றுமதி தயார்நிலை மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 3-வது இடம் - முதல்வர் பழனிசாமி

ஏற்றுமதி தயார்நிலை மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 3-வது இடம் - முதல்வர் பழனிசாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ஏற்றுமதி அம்சங்களில் மாநிலங்கள் பட்டியலில் முதலிடத்தை குஜராத்தும் இரண்டாம் இடத்தை மகாராஷ்டிராவும் பெற்றுள்ளது.

ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் சிறந்த முதல் ஐந்து மாநிலங்களில் தமிழகம் மூன்றாம் இடம் பெற்றுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அரசின் கொள்கை வர்த்தக நிலவரம்,ஏற்றுமதி சூழல், ஏற்றுமதி செயல்பாடு உள்ளிட்ட நான்கு முக்கிய அம்சங்கள் அடிப்படையில் மாநிலங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. இதனடிப்படையில் ஏற்றுமதி அம்சங்களில் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

முதலிடத்தை குஜராத்தும் இரண்டாம் இடத்தை மகாராஷ்டிராவில் மூன்றாம் இடத்தை தமிழகமும் பெற்றுள்ளதாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் ஆட்டோமொபைல் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு பொறுத்தவரை 46 சதவீதமாகவும், ஆடைகள் ஏற்றுமதியில் 19 சதவீதமாகவும், மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 19 சதவிகிதம் ஆகவும் தமிழகத்தின் செயல்பாடு இருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்  குறிப்பிடப்பட்டுள்ளது.



மேலும் தமிழகம் தற்போது வளர்ச்சிப் பாதையை நோக்கி  சென்று கொண்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.
Published by:Vijay R
First published:

Tags: Edappadi palanisamy

அடுத்த செய்தி