ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரயில் பயணத்தின்போது பாதி வழியில் அமைச்சர் மெய்யநாதனுக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

ரயில் பயணத்தின்போது பாதி வழியில் அமைச்சர் மெய்யநாதனுக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் மெய்யநாதன்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் மெய்யநாதன்

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் மெய்யநாதன் தனி வாகனம் மூலம் மருத்துவ குழுவுடன் சென்னைக்கு  அழைத்து செல்லப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் புதுக்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் வழியில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிதம்பரம் ராஜா முத்தையா அரசு  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்து உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

  Also Read:  அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை முதல் வாள்வீச்சு போட்டியில் தங்கம் வென்ற பவானி தேவி வரை இன்றைய தலைப்புச் செய்திகள்!!.

  இந்த நிலையில் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மெய்யநாதன் தனி வாகனம் மூலம் மருத்துவ குழுவுடன் சென்னைக்கு  அழைத்து செல்லப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Cuddalore, DMK, Minister Meyyanathan