மிரட்டும் கொரோனா- ஒரே நாளில் 3,940 பேர் பாதிப்பு: 54 பேர் உயிரிழப்பு

மிரட்டும் கொரோனா- ஒரே நாளில் 3,940 பேர் பாதிப்பு: 54 பேர் உயிரிழப்பு
(கோப்புப் படம்)
  • Share this:
தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 3,940 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 82,275ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ’தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 31,505 பேருக்கு கொரோனா பாதிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 10,56,564 பேருக்கு கொரோனா பாதிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 3,761 பேருக்கும், வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து திரும்பிய 179 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரையில் மொத்தமாக 82,275 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,443 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 45,537 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது. இன்று மட்டும் 54 பேர் உயிரிழந்துள்ளநிலையில், மொத்த உயிரிழப்பு 1,079 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 1,992 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.



செங்கல்பட்டில் 183 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 124 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 92 பேருக்கும், மதுரையில் 284 பேருக்கும், திருவண்ணாமலையில் 114 பேருக்கும், திருவள்ளூரில் 99 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
First published: June 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading