கர்நாடகத்தைப் போல் தமிழகத்திற்கும் தனிக்கொடி உருவாக்க வேண்டும் - தொல். திருமாவளவன்

பஞ்சமி நிலத்தை பற்றி பேசாமல் இருந்த ராமதாஸ், எச்.ராஜா போன்றோர் திமுகவை சீண்டுகின்றனர். இது அரசியல் ஆதாயத்திற்காகவும், திமுக கூட்டணியில் வேண்டுமென்று சலசலப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பேசி வருகின்றனர்.

கர்நாடகத்தைப் போல் தமிழகத்திற்கும் தனிக்கொடி உருவாக்க வேண்டும் - தொல். திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன்
  • News18
  • Last Updated: November 2, 2019, 5:48 PM IST
  • Share this:
மொழி வாரியாக ஒவ்வொரு மாநிலமும் பிரிக்கப்பட்ட நாளைக் கொண்டாடி வருகின்றன. இந்நிலையில் கர்நாடகா தன் மாநிலத்திற்கென தனி கொடியை உருவாக்கிக் கொண்டதை போல் தமிழ்நாட்டிற்கும் ஒரு கொடி உருவாக்க வேண்டும் என தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். 

தருமபுரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பேட்டியளித்தபோது ”தமிழக அரசு மேட்டூர் உபரிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கியது போல், தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த விரைவாக தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும் “ என்றுக் கூறினார்.

மேலும் தொடர்ந்த அவர் “ மத்திய அரசு தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் ரஜினிகாந்துக்கு சர்வதேச திரைப்பட விழாவில் விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சிகிறது. தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களில் மொழிவாரியாக பிரிக்கப்பட்ட நாளினை அந்த மாநில தினங்களாக கொண்டாடி வருகின்றனர்.


கர்நாடகா தினத்தில் அங்குள்ள பொதுமக்களும் அமைச்சர்களும் கர்நாடகாவிற்கு என உருவாக்கப்பட்ட தனி கொடியை ஏற்றி கொண்டாடி வருகின்றனர் இதன் அடிப்படையில் தமிழகத்திற்கும் தனிக்கொடி ஒன்றை வடிவமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

மேலும் தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என்று உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த சங்கரலிங்கனார் அவரின் தியாகத்தை போற்றும் வகையில் அந்த நாளில் அவருக்கு உரிய மரியாதையை அரசு செலுத்த வேண்டும். மேலும் அக்டோபர் 13-ம் தேதி அவருடைய நினைவு தினத்தில் அரசு வீரவணக்க விழாவாக நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்கவும், கணக்கெடுக்க வேண்டும் என, ஏற்கனவே தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி இதற்கான கமிஷன் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதை செயல்படுத்தி விரைவில் இப்பிரச்சனையை தீர்க்க முதல்வர் நடவடிக்டை எடுக்க வேண்டும். இவ்வளவு நாட்களாக, பஞ்சமி நிலத்தை பற்றி பேசாமல் இருந்த ராமதாஸ், எச்.ராஜா போன்றோர் திமுகவை சீண்டுகின்றனர். இது அரசியல் ஆதாயத்திற்காகவும், திமுக கூட்டணியில் வேண்டுமென்று சலசலப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பேசி வருகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தலை தமிழகத்தில் நடத்த அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும் இந்த முறையாவது உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுகிறது. உள்ளாட்சி மன்றங்களில் காலியாக உள்ள பதவிகளை நிரப்ப 6 மாத கால அவகாசம் மட்டுமே உள்ளது. ஆனால் இவ்வளவு ஆண்டுகள் உள்ளாட்சி மன்றத் தேர்தலை நடத்தாது சட்ட விரோதமான செயல். இது கண்டிக்கத்தக்கது. வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் உள்ளாட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என்று ஆளும் கட்சியை தெரிவித்து வருகிறது. இந்த முறையாவது அவர்கள் கூறியது போல உள்ளாட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் ”என்று கூறினார்.

”மத்திய அரசு மும்மொழி கொள்கை யில் மூன்றாவது மொழியை விருப்பம் மொழியாகத்தான் செயல்படுத்துவதாக தெரிவிக்கிறது. ஆனால் உண்மையில், 10 ஆண்டுகளுக்குள் இந்தியை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பேசுகின்ற வகையில், அவர்களது தாய்மொழியை விட இந்தியை பேசவேண்டும் என்பதற்காக, அரசியல் கொள்கையாக மத்திய செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் இந்தி மொழியை திணிக்கும் நடவடிக்கை கண்டனத்துக்குரியது”  என திருமாவளவன் தெரிவித்தார்.

பார்க்க :

தாய் பாசத்தை மிஞ்சிய நாய் பாசம்… நாய்க்காக உயிரைவிட்ட இளம்பெண்

First published: November 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்