முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பள்ளிகளில் மீண்டும் உடற்கல்வி பாட வேளைக்கு அனுமதி: தமிழக பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு.!

பள்ளிகளில் மீண்டும் உடற்கல்வி பாட வேளைக்கு அனுமதி: தமிழக பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு.!

உடற்கல்வி வகுப்பு

உடற்கல்வி வகுப்பு

6,7,8,9 வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகளை நடத்த அனுமதி அளித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது..கொரொனோ காரணமாக பள்ளிகள் 2அண்டுகள் மூடப்பட்டு இருந்தன இதனையடுத்து தற்போது கொரொனோ பரவல் குறைந்துள்ளதையடுத்து உடற்கல்வி வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப?

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்த உடற்கல்வி வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறுவதால் 6,7,8,9 வகுப்புகளுக்கு உடற்கல்வி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவத்தொடங்கியதன் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. தொற்று பரவல் குறையத் தொடங்கியதையடுத்து   கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அதனை அடுத்து நவம்பர் முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து ஜனவரி மாதத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து  பள்ளிகளுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 1 முதல் 12ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.  அதேபோல கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன.

இருப்பினும்   தொற்று பரவல் அச்சம் காரணமாக பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளிக்காமல் இருந்தது. பல்வேறு தரப்புகளில் இருந்தும்  உடற்கல்வி வகுப்புகள் நடத்த கோரிக்கைகள் எழுந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது 6, 7, 8, 9 ஆகிய வகுப்புகளுக்கு உடற்கல்வி வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெறுவதால் அவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை.

மேலும் படிக்க: அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியும் முகாமில் அதிகாரியை வறுத்தெடுத்த மாவட்ட ஆட்சியர்

top videos

    இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் உடற்கல்வி வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள  வகுப்பினருக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உடற்கல்வி வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Sports, Tn schools