ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமையும் விடுமுறை அறிவிப்பு - முழு விவரம்

கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமையும் விடுமுறை அறிவிப்பு - முழு விவரம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

School Leave : தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வடகிழக்கு பருவமழை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடலோர, டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. தற்போது வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இதன் காரணமாக இன்று முதல் 13ம் தேதி வரை ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பெரும்பாலான மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதி தீவிர மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க : தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    இந்த நிலையில் கனமழை காரணமாக கீழ்காணும் தமிழ்நாட்டின் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன் விவரம் பின்வருமாறு:-

    1.சென்னை

    2.திருவள்ளூர்

    3.காஞ்சிபுரம்

    4.கடலூர்

    5.சேலம்

    6.திருச்சி

    7.கரூர்

    8.செங்கல்பட்டு

    9.மயிலாடுதுறை

    10. திருவாரூர்

    11.திருவண்ணாமலை

    12.அரியலூர்

    13.ராணிப்பேட்டை

    14.திண்டுக்கல்

    15.விழுப்புரம்

    16. வேலூர்

    17. நீலகிரி

    18.தேனி

    19.கோவை

    20.பெரம்பலூர்

    21. கள்ளக்குறிச்சி

    22. தஞ்சாவூர்

    23.திருப்பத்தூர்

    24.ராமநாதபுரம் (பள்ளிகளுக்கு மட்டும்)

    25.புதுக்கோட்டை

    Published by:Arunkumar A
    First published:

    Tags: Chennai Rain, College, School Leave