• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

வாக்கு  எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கை

ஊரக உள்ளாட்சித் தேர்தலில்  2,981 பதவியிடங்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8மணிக்கு தொடங்கியது. இதற்காக 9 மாவட்டங்களில் 74 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

  • Share this:
    தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்றன. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெற்றது.  வாக்குச்சீட்டு முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

    மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து உறுப்பினர் ஆகிய 4 பதவிகளை தேர்வு செய்வதற்காக தேர்தல் நடந்தது. 23,998 பதவியிடங்களுக்கு 79,433 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    ஊரக உள்ளாட்சித் தேர்தலில்  2,981 பதவியிடங்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8மணிக்கு தொடங்கியது. இதற்காக 9 மாவட்டங்களில் 74 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றிய களுக்கான வாக்கு எண்ணிக்கை 13 இடங்களில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணும் பணியில் 5,605 அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் மொத்தமாக 28 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், 293 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர், 666 ஊராட்சி மன்ற தலைவர், 4,739 கிராம வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 5,726 பதவிகளுக்கு
    20 ஆயிரத்து 99 பேர் போட்டியிட்டனர்.

    வாக்கு எண்ணிக்கை சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது..உரிய அடையாள அட்டை இன்றி வருபவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. செல்போன் போன்றவற்றை வாக்கு எண்ணும் பகுதிக்குள் எடுத்து வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு குறைவான வாக்குகள் என்பதால் இந்த பதவிகளுக்கான முன்னணி மற்றும் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் மதியத்திற்குள் தெரியவரும். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி 20-ம் தேதி நடைபெற உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: