• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மீண்டும் உயரும் தமிழகத்தின் வருவாய்- ஒரே மாதத்தில் ரூ.1000 கோடிக்கு மேல் ஈட்டிய பத்திரப்பதிவுத்துறை

மீண்டும் உயரும் தமிழகத்தின் வருவாய்- ஒரே மாதத்தில் ரூ.1000 கோடிக்கு மேல் ஈட்டிய பத்திரப்பதிவுத்துறை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஊரடங்கு காரணமாக அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலங்கள், வர்த்தக நிறுவனங்கள் என அனைத்து அடைக்கப்பட்டன.  இதனால் பொருளாதாரம் வீழ்ச்சியை அடைந்தது. மாநில அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

  • Share this:
    கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக குறைந்துபோன தமிழகத்தில் வருவாய் மீண்டும் வளர்ச்சிப் பாதையை நோக்கி திரும்பியுள்ளது.

    தமிழகத்தில்  கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா 2வது அலை பரவத் தொடங்கியது.  ஏப்ரல் மாதத்தில் அதிகரித்த பரவல், மே, ஜூன் மாதங்களில் உச்சம் பெற்றது. இதன் காரணமாக மே  10ம் தேதி முதல்  தமிழகத்தில் ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டது. தற்போது தளர்வுகளுடன் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஊரடங்கு காரணமாக அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலங்கள், வர்த்தக நிறுவனங்கள் என அனைத்து அடைக்கப்பட்டன.  இதனால் பொருளாதாரம் வீழ்ச்சியை அடைந்தது. மாநில அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அரசின் வருவாயை எவ்வித கசிவுமின்றி வசூலிக்க முழு கவனம்  செலுத்த வேண்டும் என்றும் நிலுவை ஆவணங்கள் சரியாக இருப்பின் உடன் விடுவித்தல், தணிக்கை இழப்புகளை வசூலித்தல், சரியான ஆவணங்களை தாமதமின்றி பதிவு செய்தல் முதலான யுக்திகளை கையாண்டு வருவாயை பெருக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கும் அதிகாரிகளும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் அறிவுறுத்தியிருந்தார்.

    இதன் காரணமாக மீண்டும் மாநிலத்தின் வருவாய் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அதன்படி கடந்த ஜூலை மாதத்தில்  பதிவுத்துறையில் 1242.22 கோடி ரூபாய்  வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.  இது 2020ம் ஆண்டின் ஜூலை மாதத்தை விட 598 கோடி ரூபாய் அதிகமாகும்.

    இதையும் படிங்க: குடும்ப தலைவிக்கு ரூ.1000: மக்கள் அச்சமடைய வேண்டாம்- அமைச்சர்!


    கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழகத்திற்கு பத்திரப்பதிவு துறை மூலம் 1077.43 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. பின்னர் ஊரடங்கு காரணமாக மே மாதத்தில் இந்த வருவாய் 233.89 கோடி ரூபாயாக குறைந்தது. பின்னர்  ஜூன் மாதத்தில் 789.33  கோடி ரூபாயாக உயர்ந்தது. ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களை சேர்த்து இந்த நிதியாண்டில் பத்திரப்பதிவுத்துறை மூலம் 3342.87 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

    மேலும் படிக்க: இ-ருபி’ புதிய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை அறிமுகம்: பயன்படுத்துவது எப்படி?


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: