Corona Cases | தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 29 ஆயிரத்தை நெருங்கியது.. 236 பேர் உயிரிழப்பு!

மாதிரி படம்

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று 7130 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

  • Share this:
    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அளவில் இன்று 4 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,092 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன.

    கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், எதுவும் பலன் தராததால், தற்போது இறுதி கட்ட ஆயுதமாக பல்வேறு மாநிலங்களும் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து வருகின்றன. தமிழகத்திலும் நாளை முதல் 24ம் தேதி வரை 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்திலும் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நேற்று 27,000ஐ கடந்தது. இந்தநிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,80,259 ஆக உயர்ந்துள்ளது.

    தொடர்ந்து, கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 23,515 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 12,20,064 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 236 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 15,648 ஆக அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று 7130 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2509 பேரும், கோவையில் 2509 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: