தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.

 • Share this:
  கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமடைந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரேநாளில் 15,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,”தமிழகத்தில் புதிதாக 15,830 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாகாக 4,640 பேருக்கும் செங்கல்பட்டில் 1,181 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,13,502 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 31,136 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 14,043 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 9,90,919பேர் கொரோனாவிலிருந்து விடுப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா சிகிச்சை பலனின்றி 77 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த கொரோனா உயிரிழப்பு 13,728ஆக அதிகரித்துள்ளது.

  தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலைக்  கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளும் தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ளது.ஞாயிற்றுகிழமைகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: