• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,303 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,303 பேருக்கு கொரோனா பாதிப்பு!

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,303 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • Share this:
    கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு தகவலில், ‘தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,39,836 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 1,303 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 26,79,568 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 1,428 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

    அதன்மூலம் இதுவரையில், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 26,27,780 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 35,768 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்து வீட்டுத் தனிமையில் இருப்பவர்களையும் சேர்த்து தற்போது 15,992 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    தமிழகத்தில் அதிகபட்சமாக இன்று மட்டும் சென்னையில் 168 பேருக்கும், கோயம்புத்தூரில் 128 பேருக்கும், செங்கல்பட்டில் 98 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: