தமிழகத்தில் எதிர்பார்த்ததை விட 78% கூடுதல் மழை!

மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிக மழைப்பொழிவை கொடுத்தாலும் தென்மேற்கு பருவமழை துவங்கும் பொழுது அதன் தாக்கம் காரணமாக மழை பொழிவு இருக்கும். குறிப்பாக வெப்ப சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரளவுக்கு மழைப்பொழிவு காணப்படும்.

  • Share this:
தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் ஜூலை 17-ஆம் தேதி வரை எதிர்பார்த்த மழை அளவை விட 78 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜூன்  முதல் நேற்று வரையான காலகட்டத்தில்  தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மழையின்
இயல்பு அளவு - 87.7மி.மீ (8.8செ.மீ) ஆகும். ஆனால் 155.8மி.மீ(15.6செ.மீ) அளவு மழை பதிவாகியுள்ளது.
இது இயல்பை விட 78% கூடுதல் ஆகும்.Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தமிழகத்தில் மழைப்பொழிவு அதிகம் காணக் கூடிய மாதங்கள்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிக மழைப்பொழிவை கொடுத்தாலும் தென்மேற்கு பருவமழை துவங்கும் பொழுது அதன் தாக்கம் காரணமாக மழை பொழிவு இருக்கும். குறிப்பாக வெப்ப சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரளவுக்கு மழைப்பொழிவு காணப்படும்.

இதையும் படிங்க: தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை..


இந்த நிலையில் ஜூன், ஜூலை ஆகிய இரண்டு மாதத்தில் எதிர்பார்த்த மழை அளவைவிட கூடுதல் மழையை தமிழகம் பெற்று இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக பெரம்பலூரில் வழக்கமாக 5 சென்டிமீட்டர் மழை பொழிவு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயல்பைவிட 22 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.  வேலூர் மாவட்டத்தில் 5 சென்டிமீட்டர் மழை பொழிவு  எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இயல்பு நிலையை விட 17 சென்டிமீட்டர் மழை பொழிவு பதிவாகிறது.

மேலும் படிக்க: பெண்களுக்கான இலவச டிக்கெட்டை கொடுத்து வடமாநிலத்தவர்களிடம் கட்டணம் வசூல்: அரசு பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட்!


அதேபோல் திருச்சியில் ஒரு சென்டிமீட்டர் மழை பொழிவு எதிர்பார்த்த நிலையில் ஐந்து சென்டி மீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பொழிவு பதிவாகியுள்ளதாகவும் இதனால் தற்போதைய நிலையில் 78% அளவிற்கு மழை கூடுதலாக கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வரும் நாட்களில் மழை பொழிவு குறைந்தால் இந்த சதவீதம் குறைய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Published by:Murugesh M
First published: