10 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி தமிழகம் வந்தது: நாளை தடுப்புசி முகாம் இயங்கும் என அறிவிப்பு!

கோப்புப் படம்

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான மூலம் 50 பார்சல்களில் 6 லட்சம் டோஸ் கோவீஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. 

  • Share this:
புனேவில் இருந்து  6, லட்சம் டோஸ் கோவீஷீல்டு தடுப்பூசி மருந்துகள் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. எனினும்,  டெல்டா வகை, டெல்டா பிளஸ், மூன்றாவது அலை என தொடர் அச்சுறுத்தல் உள்ளதால் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியும்,
சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்படும் கோவீஷீல்டு தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு  ஏற்பட்டது.  இதனால் பொதுமக்களுக்கு   தடுப்பூசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. உடனடியாக தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தியது.

தமிழக மக்கள் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதற்காக தமிழக அரசு நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்தும் வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான மூலம் 50 பார்சல்களில் 6 லட்சம் டோஸ் கோவீஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.  தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக் கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை டி,எம்,எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்புக் கிடங்கிற்கு கொண்டு சென்றனர்.  தடுப்பூசி மருந்துகளை தட்டுப்பாடு உள்ள இடத்திற்கு அனுப்பி வைக்க உள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இன்று ஒரே நாளில் சுமார் 10 லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தன.

தடுப்பூசி கையிருப்பில் உள்ளதால் நாளை தடுப்பூசி முகாம் வழக்கம் போல் இயங்கும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Published by:Murugesh M
First published: