• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Ration Shop: தீபாவளி பண்டிகை: ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு...

Ration Shop: தீபாவளி பண்டிகை: ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு...

ரேஷன் கடை.| மாதிரிப்படம்.

ரேஷன் கடை.| மாதிரிப்படம்.

நவம்பர் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில்  நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல்  மாலை 7 மணி வரை திறக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி அத்தியாவசிய பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குபவர்கள் பயன்பெறும் வகையில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதன்படி, தீபாவளி  பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பயன்பெறும் வகையில் நவம்பர் மாதத்திற்கான  சிறப்பு  அத்தியாவசிய பொருட்கள் அதிகபட்சமாக  முன்நகர்வு முழுமையாக முடிக்க வேண்டும்.

    மேலும், நவம்பர் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில்  நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல்  மாலை 7 மணி வரை திறக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்க மக்களை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என்று தமிழக அரசு கடந்த மாதம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: அரபிக் கடலில் இரண்டு காற்றழுத்த தாழ்வுபகுதி: தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: