Home /News /tamil-nadu /

ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு: பொங்கல் தொகுப்பு வழங்குவதில் பாதிப்பா?

ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு: பொங்கல் தொகுப்பு வழங்குவதில் பாதிப்பா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

500 நியாய விலை அட்டைகளுக்கு மேலுள்ள கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூபாய் 5000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழ்நாடு ரேஷன் கடைஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் (12.01.2022) போராட்டம் அறிவித்துள்ளனர்.

    தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் சிதம்பரத்தில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், தமிழக அரசு பொதுமக்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருவதை வரவேற்பதாக தெரிவித்தார். அதே வேளையில், நியாயவிலை கடைகளுக்கு மொத்தமாக கொண்டுவரும் பொருட்களின் அளவு குறைவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    வெல்லம் தரமற்ற நிலையில் உள்ளதாகவும், பொருட்களை வைப்பதற்கான பைகள் குறைந்த அளவே வந்துள்ளதாகவும் இதனால் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் பொழுது பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் உடனடியாக நிர்வாகம் தலையிட்டு மேற்கண்ட பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

    மேலும், 500 நியாய விலை அட்டைகளுக்கு மேலுள்ள கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூபாய் 5000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுதினம் (12.01.2022) அன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

    இதையும் படிங்க: புறநகர் ரயில்களில் தடுப்பூசி சான்றிதழ் அவசியம்: பயணிகள் அவதி


    அன்றைய தினம் வழக்கம் போல் பொங்கல் பரிசு தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றும் மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர்: பிரசன்ன வெங்கடேசன் 
    Published by:Murugesh M
    First published:

    Tags: Pongal Gift, Ration card, Ration Shop

    அடுத்த செய்தி