முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வடதமிழகத்தை அச்சுறுத்தும் பாலாறு.. 100 ஆண்டில் இல்லாத வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை

வடதமிழகத்தை அச்சுறுத்தும் பாலாறு.. 100 ஆண்டில் இல்லாத வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை

பாலாறு வெள்ளம்

பாலாறு வெள்ளம்

வரலாறு காணாத வெள்ளப்பெருக்கின் காரணமாக காஞ்சிபுரம் பாலாற்றின் தரைப்பாலம் அதேபோல வாலாஜாபாத் பாலாற்றின் தரைப்பாலம் முழுமையாக நிரம்பி உள்ளது.

  • Last Updated :

பாலாறு… கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகி ஆந்திரப்பிரதேசம் வழியாக தமிழகத்திற்குள் நுழைகிறது. தமிழகத்தின் வடமாவட்டங்களான வேலூர், காஞ்சிபுரம் , திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை ஆகியவை பாலாற்றினால் பயன் பெறுகின்றன.  வடகிழக்கு பருவமழை காரணமாக கர்நாடக, ஆந்திரா வனப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.  ஆந்திர மாநிலத்தில் உள்ள புல்லூர் தடுப்பணையில் இருந்து பாலாற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கிளை ஆறுகளில் பாயும் வெள்ளமும் பாலாற்றில் கலக்கத்தொடங்கியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு லட்சம் கன அடி நீர் பாலாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு பெய்த பெரு வெள்ளத்தின் போது கூட 45 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டது. சுமார் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக பாலாற்றில் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக கடந்த 10 நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி ஆற்றில் நீர் கலந்து ஒருவித காரணத்தினாலும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாற்றில் வடகிழக்கு பருவ மழை  காரணமாக அதிகபட்சமாக 60 ஆயிரம் கன அடி நீர் அளவிற்கு சென்று கொண்டிருந்தது. நேற்று காலையில் இருந்து காஞ்சிபுரம் பாலாற்றில் சுமார் 30 ஆயிரம் கனஅடி நீர் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் திறந்து விடப்பட்ட ஒரு லட்சம் கன அடி நீரும் தற்போது பாலாற்றில் சென்று இருப்பதாலும் அந்த நீர் தற்போது வேலூர் மாவட்டத்தில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உள்ளே புகுந்து வேகமாக ஆறு பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது.

வரலாறு காணாத இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக காஞ்சிபுரம் பாலாற்றின் தரைப்பாலம் அதேபோல வாலாஜாபாத் பாலாற்றின் தரைப்பாலம் முழுமையாக நிரம்பி உள்ளது. நிரம்பியுள்ள தரை பாலத்தின் மேல் நீர் இடுப்பு அளவிற்குச் சென்று கொண்டிருக்கிறது. அதேபோல ஆற்றிலிருந்து நிரம்பிய வரும் நீரானது வெளியேறி வாலாஜாபாத்தில் புகுந்துள்ளது . இதனால் வாலாஜாபாத் சாலைகளில் ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது அதேபோல் அருகில் இருக்கும் அரசு பள்ளியிலும் நீர் புகுந்துள்ளது . வரலாறு காணாத வெள்ளத்தை பார்ப்பதற்காக ஆர்வமுடன் பொது மக்கள் அவ்விடத்தில் கூடி உள்ளதால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் தவித்து வருகின்றனர். அதேபோல இதனால் வாலாஜாபாத் பகுதியிலும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வெள்ளநீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

Also Read: மழை வெள்ளத்தில் நீச்சலடித்து முதியோர்களை காப்பாற்றிய வாலாஜாபாத் தாசில்தார்

வெள்ளப்பெருக்கால் 30 கிராமங்கள் துண்டிப்பு:

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்திற்கு நடுவே  சுமார் ஒரு கிலோமீட்டர் தூரமுள்ள பாலாற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருக்கழுகுன்றம் பகுதியில் இருந்து மதுராந்தகம் செல்வதற்கு முடியாத நிலை உள்ளது.

top videos

    ராணிப்பேட்டை மற்றும் வேலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கனமழை காரணமாக பாலாற்றில் அதிக அளவில் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது இதன் காரணமாக வல்லிபுரம் ஈசூர் ஆகிய பகுதிகளில் உள்ள இந்த பாலத்தின் மேல் 2 அடி தண்ணீர் ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செங்கல்பட்டு வழியாக மதுராந்தகம் செல்லவும் மதுராந்தகத்தில் இருந்து செங்கல்பட்டு வழியாக திருக்கழுகுன்றம் செல்லவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களுக்கு தண்டோரா மூலம் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது

    First published:

    Tags: Chengalpattu, Chennai flood, Chennai rains, Flood, Flood alert, Flood warning, Heavy Rainfall, Kancheepuram, Rain, Weather News in Tamil