Home /News /tamil-nadu /

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

மாதிரிபப்டம்

மாதிரிபப்டம்

அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளித்து முதலமைச்சர் உத்தரவு.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தமிழகத்தில் கனமழை காரணமாக சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று பிற்பகலில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல விடாமல் பெய்த தொடர்மழையால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. சென்னை சைதாப்பேட்டை, கிண்டி, நுங்கம்பாக்கம், வடபழனி, போரூர், தியாகராயநகர், அண்ணாசாலை, ராயப்பேட்டை, திருவான்மியூர், கோட்டூர்புரம், மயிலாப்பூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக சென்னை எம்.ஆர்.சி. நகரில் 21.45 சென்டி மீட்டர் மழை பதிவானது. நந்தனத்தில் 18.15 சென்டி மீட்டர் மழையும், அண்ணா பல்கலைக்கழகத்தில் 15 சென்டி மீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 14.3 சென்டி மீட்டர் மழையும் பதிவானது.

    சென்னையை மிரட்டிய மழையால், அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் வாகன ஓட்டிகள் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர். குறிப்பாக அண்ணாசாலையில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநகரின் அசோக்நகர், போரூர், வடபழனி என அனைத்து முக்கிய சாலைகளிலும், வாகனங்கள் நகரக்கூட முடியாமல் ஒரே இடத்தில் பல மணி நேரம் நின்றுகொண்டிருந்ததால், தலைநகரம் ஸ்தம்பித்தது.

    Also Read:  திடீர் கனமழையால் திணறிய சென்னை.. கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி!

     



    இதனிடையே நள்ளிரவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி அலுவலகம் சென்று சென்னையில் மழை பாதிப்பிற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். சென்னை பூவிருந்தமல்லி ஹைரோடு அருகில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து உடனடியாக சீர்செய்யுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    Also Read:  காதலனுடன் இளம்பெண் உல்லாசம்.. வீடியோ எடுத்து மிரட்டிய சித்தப்பா - சித்தியால் வெளிச்சத்துக்கு வந்த கொடூரம்

    அதன்பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்று எதிர்பாராதவிதமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக இன்று 31.12.2021 ஒரு நாள் மட்டும் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில், அத்தியாவசிய சேவைகள் தவிர, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்கள்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Chennai Rain, Chennai rains, College, MKStalin, School Leave, Tamil News, Tamilnadu

    அடுத்த செய்தி