• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மின் கட்டணம் செலுத்த 15 நாள் அவகாசம்.. 4 மாவட்ட மக்களுக்கு சலுகை - செந்தில் பாலாஜி அறிவிப்பு

மின் கட்டணம் செலுத்த 15 நாள் அவகாசம்.. 4 மாவட்ட மக்களுக்கு சலுகை - செந்தில் பாலாஜி அறிவிப்பு

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட நான்கு மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்துவதற்கு 15 தினங்கள் கால அவகாசம்

  • Share this:
    சென்னை ,காஞ்சிபுரம் திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதிலிருந்து 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்

    சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மழைநீர் பாதிப்பு குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை அவர் ஆய்வு செய்தார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர்,சென்னையில் 66 ஆயிரம் மின் இணைப்புதாரர்களுக்கு மின் இணைப்புகள் நிறுத்தப்பட்டு 38,000 இணைப்புதாரர்களுக்கு தற்போது வரை மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். நிறுத்தப்பட்ட எஞ்சியிருக்கும் 28,ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருவதாக கூறினார்.

    Also Read: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (12.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

    கடந்த 2015 ,2016 மற்றும் கடந்த ஆண்டுகள தடைபட்ட மின்சாரம் இரண்டு வார காலத்திற்கு பிறகே சரி செய்யப்பட்டதாக தெரிவித்த அவர் தற்போது மழை நின்ற உடன் மின்சாரம் சீர்செய்யப்பட்டு வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.

    மழை பாதிப்பால் வடசென்னை அனல்மின் நிலையத்தில் 400 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக தெரிவித்தவர் இதனை ஈடு செய்யும் விதமாக தூத்துக்குடி மற்றும் மேட்டூர் மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டதாக கூறினார். இன்று பிற்பகல் வடசென்னை அனல்மின் நிலையத்தில் 400 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று கூறினார்.

    மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை,  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கு 15 தினங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுடுதாக தெரிவித்தார். இதுகுறித்த உத்தரவுகள் அந்தந்த மின்சார வாரிய அலுவலகங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: