சென்னையில் மிதமான மழை தொடரும்... அடுத்த 24 மணி நேரத்துக்கான வானிலை ரிப்போர்ட்...!

சென்னையில் மிதமான மழை தொடரும்... அடுத்த 24 மணி நேரத்துக்கான வானிலை ரிப்போர்ட்...!
வானிலை..
  • Share this:
அடுத்த 24 மணி நேரத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி ராமநாதபுரம், புதுக்கோட்டை டெல்டா மாவட்டங்கள் கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி திண்டுக்கல் நீலகிரி கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த பாலச்சந்திரன், “தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தற்போது வலுவாக உள்ளது . கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. 17 இடங்களில் கனமழை மூன்று இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 18 செ.மீ மழையும் குன்னூரில் 13 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.


தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.

அடுத்து வரும் 24மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 3 ,4 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய கூடும். கனமழை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் கடலூர், அரியலூர், பெரம்பலூர், மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி, திண்டுக்கல், நீலகிரி கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

Loading...

டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை : மன்னார் வளைகுடா குமரி கடல் தீவுகள் இலட்சத்தீவுகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை ஒட்டியுள்ள கடற்பகுதியில் சூரை காற்றானது மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக் கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு அடுத்து இரு தினங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை பொறுத்தவரையில் கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் பதிவான மழையின் அளவு 40 செ.மீ இந்த காலகட்டத்தின் இயல்பு 36 செ.மீ. இது இயல்பை விட 11 சதவீதம் அதிகம். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை இடைவெளி விட்டு லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
First published: December 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...